பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு- திருச்சியில் ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு!

0
1

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சரண்யா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், மேலாளர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரவு செலவு சம்பந்தமான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய வார்டிலும் அவருக்கு நெருக்கமான உறுப்பினர்களுடைய வார்டில் மட்டும் அதிக நிதியை ஒதுக்கி வருகிறார். மற்ற உறுப்பினர்களின் வார்டில் குறைவான நிதியை ஒதுக்குவதாகவும் இதனால் பணிகள் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இவ்வாறு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம் என்று கூறி துணைத்தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் அசோகன், சிவக்குமார், சின்னம்மாள், லலிதா, இந்துமதி, புனிதா, ரூபினி உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.