திருச்சியில் மனைவியை கொன்ற கணவர் உட்பட 3 பேர் கைது:

0
1

திருச்சியில் மனைவியை கொன்ற கணவர் உட்பட 3 பேர் கைது:

உப்பிலியபுரம் அருகே உள்ள கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி புஷ்பவள்ளி. கடந்த வாரம் புஷ்பவள்ளி வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் இவரது கணவர், மாமியார் ஆகியோர் தலைமறைவாகினர்.

போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து,  தலைமறைவான கணவன் மாமியார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஆகியோரை தேடி வந்தனர்.

2

இந்நிலையில் பச்சை பெருமாள்பட்டியில் பதுங்கியிருந்த கொலையில் ஈடுபட்ட புஷ்பவள்ளியின்  கணவர் பெரியசாமி (32), கொலைக்கு உடந்தையாக இருந்த பெரியசாமியின் தாய் செல்லம்மாள் (63) மற்றும் உறவினர் போஜன் (78) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்ததாகவும் அதற்கு உடந்தையாக தன் தாயும் உறவினரும் இருந்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.