திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு:

0
1

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு:

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (27). இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7ஆம் தேதி தனது நண்பரின் திருமணத்திற்காக திருநெல்வேலி சென்றுள்ளார்.

2

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 40 ஆயிரம் பணம், வெள்ளிப் பொருள்கள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.

4

யோகேஸ்வரன் நேற்று (10/09/2021) காலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் நீதிமன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்