முதல்வர் இல்லத்தில் நடந்த திருச்சி எம்எல்ஏ மகன் திருமணம்!

0
1

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் மகன் விமலாதித்தனுக்கும் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் ஆணையராக இருந்த ரவிச்சந்திரன் மகள் ஐஸ்வர்யா தேவிக்கும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழக முதல்வரின் இல்லத்தில் இன்று சுயமரியாதை முறைப்படி திருமணம் நடைபெற்றது.

2

திருமணத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையை ஏற்று நடத்தி வைத்தார். இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நாளை மறுநாள் 12ம் தேதி குமரவயலூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகிறார் எம்எல்ஏ பழனியாண்டி.

3

Leave A Reply

Your email address will not be published.