டெங்குவை விரட்டும் பப்பாளி இலை ஜூஸ்:

0
1

டெங்குவை விரட்டும் பப்பாளி இலை ஜூஸ்:

தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது.

இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை. ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2

பப்பாளி இலைச் சாற்றில், பப்பாயின் மற்றும் கைமோபப்பாயின் என்சைம்கள் அதிகளவில் உள்ளன. இந்த என்சைம்கள், செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. மேலும் ஜீரண பகுதியில் உண்டாகும் வீக்கம் உள்ளிட்ட குறைபாடுகளை நீக்க உதவுகிறது. பப்பாளி இலையில் உள்ள ஆல்கலாய்டு, தலையில் உண்டாகும் பொடுகு மற்றும் வழுக்கைக்கு எதிராக போராடுகிறது. இந்த இலைகளில், வைட்டமின் ஏ, பி, சி.இ மற்றும் கே உள்ளன.

பப்பாளி இலையைக் கொண்டு தேநீர், ஜூஸ்கள், மாத்திரைகள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப் படுகின்றன. இவைகள் உடல்நல சோர்வை நீக்குவதோடு, உடல்நலத்தை சீராக்க வல்லவையாக உள்ளன.

பப்பாளி இலை சாற்றின் நன்மைகள்:

பப்பாளி இலையின் சாற்றை பருகினால், காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்திற்குள் போதிய அளவு அதிகரித்துள்ளது.

மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் நன்கு செயல்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது. மேலும் இந்த பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.

பப்பாளி இலை சாறு தயாரிக்கும் முறை

பப்பாளி இலை சாறு தயாரிக்க சுத்தமான தண்ணீர், புதிய பப்பாளி இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இலையுடன் இணைந்த தண்டுப் பகுதியை அகற்றி, இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதை, தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த சாற்றை வடிகட்டி பத்திரப்படுத்தி கொள்ளவும்.

100 மிலி அளவிலான இந்த சாற்றை, டெங்கு பாதிப்பு உள்ளவர்கள், 3 வேளை அருந்தினால் நல்ல பலன் பெறலாம். இந்த சாறின் சுவை பிடிக்கவில்லை என்றால், சிறிது உப்பு அல்லது சர்க்கரையை தங்களது விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

– DR.NANDHINI V MOHAN –BNYS

3

Leave A Reply

Your email address will not be published.