திருச்சி மாவட்டத்தில் 12ந் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்:

0
1

திருச்சி மாவட்டத்தில் 12ந் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்:

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற (12/09/2021) ஞாயிற்றுக்கிழமை 650 முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நேற்று  (9/09/2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் சிவராசு இதுகுறித்து கூறியதாவது:

2

திருச்சி மாவட்டத்தில் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு  தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் முகாமிற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி செலுத்திவர்களின் விவரங்களை உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்தல் ஆகியவற்றைக் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்தார். மேலும் முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.