திருச்சி குளிர்பான நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறையினரின் அதிரடி சோதனை: 

0
1

திருச்சி குளிர்பான நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறையினரின் அதிரடி சோதனை: 

திருச்சி பீமநகர் பகுதியில் செயல்பட்டு வரும் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் விதிகளை மீறி குளிர்பானங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் செயல்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் நேற்று (9/09/2021) அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

2

இச்சோதனையில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாத 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

4

இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறியதாவது:  இது போன்ற விதிகளை மீறி செயல்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்