திருச்சியில் வாகன சோதனையில் 11லட்சம் பணத்துடன் சிக்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு:

0
1

திருச்சியில் வாகன சோதனையில் 11லட்சம் பணத்துடன் சிக்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு:

திருச்சி கே.கே.நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் இருந்த ஒரு நபர் போலீசாரைக் கண்டு தப்பியோடினார்.

2

இதில் சந்தேகம் அடைந்த போலீசார், நபரை பிடித்து அவர் வந்த காரில் சோதனை மேற்கொண்டபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.11 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

4

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காரில் இருந்து தப்பி ஓடியது திருச்சியை சேர்ந்த போலீஸ் துணை சூப்பிரண்டு என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் பணத்தை பறிமுதல் செய்து காரில் வந்த 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்