திருச்சியில் 3000 லிட்டர் குளிர்பானம் பறிமுதல்!

0
1

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு பொதுமக்களிடம் இருந்த வந்த புகாரையடுத்து பீம நகரில் உள்ள ஒரு குளிர்பாணம் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் தயாரிக்கபட்ட 3000 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யபட்டு வழக்கு போடுவதற்காக ஒரு சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கபட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடதிற்க்கு அனுப்பி வைக்கபட்டது.

மேலும் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில் குளிர்பாணம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் சட்டம் 2006 ன் படி கடுமையான நடவிடக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் உணவு கலப்படம் சம்மந்தப்பட்ட புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
944 40 423 22

3

Leave A Reply

Your email address will not be published.