திருச்சி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்:

0
1

திருச்சி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துறை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் செல்வராஜ் (56). இவர் கடந்த ஜூலை மாதம் தனது உறவினரின் இறுதி சடங்கில் கொண்டபோது உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் கடப்பாரையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

2

இதையடுத்து இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

4

இதை அறிந்த உறவினர்கள் ராபர்ட் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இச்சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னர் போராட்டத்தைக் கைவிட்டு உடலை பெற்றுச் சென்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்