திருச்சி பொன்னம்பட்டியில் அதிகரிக்கும் குரங்குகள் அட்டகாசம்: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை:

திருச்சி பொன்னம்பட்டியில் அதிகரிக்கும் குரங்குகள் அட்டகாசம்: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை:
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பகுதியில் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவதாகவும், மேலும் வீட்டில் உள்ள உணவு பொருள்களை எடுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களை சேதப்படுத்தாகவும், குரங்களின் நடமாட்டதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தனியாக விட்டுச் செல்ல அச்சமாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
