முத்து உடையார் அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு தலைவர்களின் படங்கள்: 

0
1

முத்து உடையார் அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு தலைவர்களின் படங்கள்: 

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியை சேர்ந்த MUTHU UDAYAR TRUST FOR HUMAN UNITY சார்பில் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு காமராஜர், அன்னை தெரேசா, பெரியார் போன்ற தலைவர்களின் படங்கள் வழங்கப்பட்டது.

இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனரிடம் கேட்ட போது , தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரது பெயரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு மூலம் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு தலைவர்களின் படங்கள் வழங்கவுள்ளோம். முதல் படியாக எங்களது ஊரின் சுற்று வட்டாரத்தில் உள்ள 10 அரசு பள்ளிகளுக்கும், பாரதி
தாசன் கலை அறிவியல் கல்லூரியில் வழங்கினோம்

2

மற்றும் எனது தந்தையின் நினைவு நாள் அன்று 100 மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது என்றார்.

இந்நிகழ்வில், டேவிட் 7வது வார்டு கவுன்சிலர், மு.சண்முகம், 8வதுவார்டு கவுன்சிலர்,கருப்பையா, ஒன்றிய குழு தலைவர், மணிகன்டம் ஒண்றியம், ஜார்ஜ் பெர்ணான்டஸ், ந.குட்டபட்டு ஊராட்சி மன்ற தலைவர் Dr.மு.செல்வம், நிறுவனர், Muthu Udayar Trust for Human Unity (MUTHU), முதல்வர்,பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, செங்காயம் ,பாகனுர் ஊராட்சி மன்ற தலைவர்,கலையரசன், ந.குட்டபட்டு ஊராட்சி மன்ற துணைதலைவர், மற்றும் திரு.ரா.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.