திருச்சி காந்தி மார்க்கெட் மீன் சந்தைக்கு புதிய கட்டிடம்: 

0
1

திருச்சி காந்தி மார்க்கெட் மீன் சந்தைக்கு புதிய கட்டிடம்: 

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இயங்கிவரும் மீன் சந்தைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

2

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இயங்கிவரும் மீன் சந்தை போதுமான இடவசதியும், வாகனம் நிறுத்தமிடம் இல்லாமலும் எப்பொழுதும் நெரிசலுடன் காணப்படுகிறது. ஆகையால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் தரை மற்றும் முதல் தளத்தில் 150 கடைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும் தற்காலிகமாக மீன் சந்தையில் இயங்கி வரும் மீன் கடைகள் டைமண்ட் பஜாருக்கும்,  கோழி மற்றும் ஆடு இறைச்சி கடைகள் காந்தி மார்க்கெட் பின்புறம் உள்ள ஆடு வதை கூட வளாகத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.