மதம் மாறிய இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு தொடர்ந்து சலுகைகள் வேண்டும்-திமுக எம்எல்ஏ பேச்சு!

செப்டம்பர் 8 தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இவ்வாறு திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கூறியபோது, மதம் மாறினாலும் அவர்களுக்கான ஜாதி அடையாளங்கள் மாறவில்லை என தெரிகிறது, எனவே தலித் கிறிஸ்தவர்கள் பட்டியலின வகுப்பில் சேர்ந்து சலுகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மதம் மாறினாலும் தொடர்ந்து சலுகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றி அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பி அழுத்தம் தர வேண்டும் என்று கூறினார்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லறைத் தோட்டம் அமைக்க 5 ஏக்கர் நிலமும், இஸ்லாமியர்களுக்கான அடக்க ஸ்தலத்துக்கு இடமும் வழங்க வேண்டும் என்று பேசினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துரை சந்திரசேகர், ஜாதிகளின் பெயரைச் சொல்லி வழி நடத்துவது சரியான முறை அல்ல அதனால் ஆதிதிராவிடர் பள்ளிகள் என்று விற்பதை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
