திருச்சியில் உணவு வணிகர்களின் இரண்டாவது சிறப்பு தடுப்பூசி முகாம் மற்றும் பதிவு உரிமம் சிறப்பு முகாம்

நேற்று 07.09.2021 செவ்வாய்கிழமை காலை 9.30 மணியிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள மாயாஸ் ஹோட்டலில் 112 உணவு வணிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் நிகழ்வும், 11 உணவு வணிகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் பதிவு/உரிமம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமை ஏற்று துவக்கிவைத்தார்.
இந்தகூட்டத்திற்கான ஏற்பாட்டினை பேக்கரி சங்க தலைவர் வைத்தியஙிங்கம் செயலாளர் கமால்,பொருளாளர் அருண் பாலாஜி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின்,வசந்தன், ஜஸ்டின் ஆகியோர் செய்திருந்தனார்.
மேலும் பொதுமக்கள் உணவு கலப்படம் சம்மந்தப்பட்ட புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
944 40 423 22
