திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் எதிரொலி-மாநகரில் கூடுதல் காவல் நிலையம்!

0
1

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப் படுவதாக நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அறிவித்தார். இதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி விரிவாக்கம் தொடர்பான நிர்வாக பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நிலையில் காவல்துறையும், மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதல் காவலர்கள் மாநகருக்கு தேவை என்றும் கூடுதலாக அமைக்க வேண்டிய காவல் நிலையங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.
இவ்வாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் காவல்துறையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மாநகர காவலில் வரும் இடங்கள் குறித்தும் ஆய்வு செய்து அரசுக்கு கருத்துருவை தயார் செய்து பரிந்துரை செய்துள்ளார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண்
2

இப்படி திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதியை பிரித்தும், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதியை பிரித்தும் உய்யகொண்டான் திருமலை காவல் நிலையம் அமைப்பதற்கு மேலும் மற்ற ஏனைய பகுதிகளிலுள்ள மாநகராட்சிக்கும் வரும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பிரித்துக் கொடுப்பது சம்பந்தமாகவும் மேலும் கூடுதல் காவலர்கள் பணியமர்த்துவது சம்பந்தமாகவும் தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்பியிருக்கிறார் காவல் ஆணையர் அருண்.

3

Leave A Reply

Your email address will not be published.