திருச்சியில் பிடிபட்ட மது பாட்டில்களை கணக்கு காட்டுவதில் முறைகேடு-ரைட் செய்த சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!

0
1

திருச்சி மாநகர பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்கப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் இரவு நேரங்களில் விற்கப்படுவதாகவும், மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதன் பெயரில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பதுக்கி வைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை தவறாக கணக்கு காட்டி கூடுதல் விலைக்கு கள்ளச் சந்தைகளில் மற்றவர்களிடமும் விற்பனை செய்து வருவதாக போலீசார் மீது திருச்சி காவல் ஆணையருக்கு புகார் சென்றது.

இதனடிப்படையில் திருச்சி காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் மதுவிலக்கு குற்றப்பிரிவு போலீசார் பிடிபடும் மதுபாட்டில்களை தவறாக கணக்கு காட்டி, அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்தும் பணியில் கவனக்குறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சுதாவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்தும் திருச்சி காவல் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.