திருச்சி சிறப்பு முகாமில் 27 நாளாக தொடரும் போராட்டம் !

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் வெளிநாடுகளைச் சேர்ந்த நபர்கள் குற்றம் செய்ததற்காகவும், அகதிகளாக ஆவணங்கள் இன்றி வந்தவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். இது போன்று பல்வேறு சம்பவங்களுக்காக 116 பேர் திருச்சியில் இருக்க கூடிய சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகளும் அடங்குவர்.
இவர்களில் பலருக்கு தண்டனை காலம் முடிந்து இன்றும் விடுவிக்கப்படவில்லை என்று கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர். இவ்வாறு கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கிய காத்திருப்புப் போராட்டம். தற்போது வரை இருபத்தி ஏழாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இவர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சர்களின் கவனம் ஈர்க்கும் வகையிலும் பதாகைகளை எழுதி போராடி வருகின்றனர்.
