சொத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகள் கைவிட்டதால்- கருணை கொலை செய்ய தாய் திருச்சி கலெக்டரிடம் மனு!

0
1

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மேட்டுப்பாளையம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (80) இவரது கணவர் முனியாண்டி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும் இருவருக்கும் ஒரு மகன், மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நால்வரும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.

அதேசமயம் முனியாண்டி இருக்கும்போது தனது மகனின் பெயரில் சொத்துக்களை எழுதி வைத்து விட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சொத்துக்களை பெற்றுக்கொண்ட மகன் தாய் ராஜாமணி கை விட்டு, வீட்டை விட்டு விரட்டி விட்டார். இந்த நிலையில் தாய் ராஜாமணி தனது மூன்றாவது மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில் மகளுக்கும் அவரது கணவருக்கும் சண்டை ஏற்பட அங்கிருந்து தாய் ராஜாமணி வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் வாழ வழியின்றி இருந்த ராசாமணி தனது கணவர் தனது மகனுக்கு அளித்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை முதியோர் நல வாழ்வு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்கீழ் ரத்து செய்யக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு கழுத்தில் வாழ வழி அற்ற எண்ணை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற பதாகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்தார்.

2

அதைப் பார்த்த காவலர்கள் பதாகையை அகற்றிவிட்டு மூதாட்டி ராஜாமணி, கலெக்டரை பார்க்க அழைத்துச் சென்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.