திருச்சி அருகே மக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்-பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்!

0
1

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி பகுதியில் ஓம் ஸ்ரீ செந்தில் கணேஷ் சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் அந்தப் பகுதியில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருக்கக்கூடிய பல்வேறு மக்களிடம் சிறியதாகவும் பெரியதாகவும் தொகைகளை பெற்ற நிதி நிறுவனம், மக்கள் திரும்ப தொகைகளை கேட்கும்போது காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி நிறுவனத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் தலைமறைவானார்கள்.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மேலும் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்ட் ஜனனிப்ரியா மற்றும் வையம்பட்டி காவலர்கள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.