தேசிய நல்லாசிரியர் விருது பெற்று திருச்சி திரும்பிய தலைமை ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு: 

0
1

தேசிய நல்லாசிரியர் விருது பெற்று திருச்சி திரும்பிய தலைமை ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு: 

தேசிய நல்லாசிரியர் விருது பெற்று (07.09.21) காலை 6.30 மணியளவில் திருச்சிக்கு திரும்பி வந்த – மணிகண்டம் ஒன்றியம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷாதேவி அவர்களை திருச்சி தொடர்வண்டி சந்திப்பில் மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருத நாயகம் தலைமையில், ஓய்வுப்பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சிவக்குமார், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் , தண்ணீர் அமைப்பின் நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, ஆசிரியர்கள் புஷ்பலதா பாலாஜி , தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், லூயிஸ்ராஜ், ஆசிரியர் பவுலாமேரி, ஆசிரியர் ரோஜா ரமணி,
பிராட்டியர் பள்ளி ஆசிரியர்கள், மணிகண்டம் ஒன்றிய ஆசிரியர்கள்,
ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துக் கொண்டு மாலை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது .

2

மேலும் பள்ளியின் முன்னாள் மாணவர் பறை இசை முழங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் இளைஞர்கள் வெடி வெடித்து கொண்டாடினர் பள்ளி ஆசிரியர் ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரச் செய்து வாழ்த்துப் பெற்றனர்.

பள்ளியின் திறப்பால் கர்ம வீரர் காமராசர் கல்வெட்டிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிராட்டியூர் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.