திருச்சியில் உணவு வணிகர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் !

0
1

திருச்சியில் நேற்று 05.09.2021 ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணியிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை, மதுரை ரோட்டில் உள்ள செல்வலட்சுமி திருமண மண்டபத்தில் 381 உணவு வணிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் நிகழ்வும், 12 உணவு வணிகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் பதிவு/உரிமம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமை ஏற்று துவக்கிவைத்தார்.

மேலும் வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மணப்பாறை விநியோகஸ்தர் சங்க தலைவர் ஹனிபா, செயலாளர் கனி, மணப்பாறை மளிகை மற்றும் மிட்டாய் கடை கூட்டமைப்பு சங்க தலைவர் ரவி, செயலாளர் மற்றும் பொருளாளர் ஸ்ரீதர், ரோட்டோர கடைகள் சங்க தலைவர் செல்வராஜ், பாலாஜி, மணப்பாறை நகராட்சி ஆணையர் செந்தில், சுகாதார அலுவலர் நெடுமாறன் மற்றும் சுகாதார ஆய்வாளர் முரளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2

இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சாண்முகசுந்தரம், அன்புச்செல்வன், ரெங்கநாதன், ஆகியோர் செய்திருந்தனார்.
மேலும் பொதுமக்கள் உணவு கலப்படம் சம்மந்தப்பட்ட புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

4

தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
944 40 423 22

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்