திருச்சி கோவில்களில் மொட்டை அடிக்க இனி காசு கிடையாது!

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான கோயில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். இவ்வாறு தமிழகம் முழுவதும் தினமும் பல ஆயிரம் முதல் லட்சக்கணக்கான மக்கள் முடி கணிக்கை செய்ய நேர்த்தி கடன்களோடு கோவிலுக்கு வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு இனி கட்டணம் வசூலிக்க படாது என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறை, கொள்ளிடம் படித்துறை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் கட்டணம் கிடையாது என்று அறிவிப்பு பதாகையை கோயில் நிர்வாகம் சார்பில் வைத்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
