திருச்சியில் 13 ஆசிரியருக்கு விருது ; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்!

0
1

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வழங்கினார்.

2

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமை வகித்தார். இதில் 13 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அனைவரையும் வரவேற்றார்.

திருச்சி மாவட்டத்தில் தேர்வான ஆசிரியர்கள் விவரம், மணச்சநல்லூர் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா,
துறையூர் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார்,
எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெயராணி,
வையம்பட்டி பாப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா மேரி,
வெல்லனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலசுப்ரமணியன்
மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முத்துச்செல்வன்
மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் அன்பு சேகரன்,
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிவராஜ்,
மணப்பாறை உசிலம்பட்டி தியாக சிலர் ஆலய மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார்,
திருநெடுங்குளம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் நித்யானந்தம்,
திருவரம்பூர் மேலகல்கண்டார்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பீபி அப்துல்,
கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணேசன்,
திருவரம்பூர் வெங்கூர் செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பகவதியப்பன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது இறுதியாக திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் நன்றி கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்