சமயபுரம் கோயிலில் 17ம் தேதி முதல் தினமும் நாள் முழுவதும் அன்னதானம்!

1
1

சமயபுரம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமயபுரம் உள்ளிட்ட பல கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதாலும், அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் ஆகிய மூன்று கோயில்களும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும், அதற்கான நிர்வாக வசதிகளையும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

3
1 Comment
  1. Nedunchezhian+T says

    சிறப்பு.

Leave A Reply

Your email address will not be published.