திருச்சி அருகே தற்கொலைக்கு தூண்டியதாக நண்பர்கள் 4 கைது ; தாய் போராட்டம்!

0
1

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கோட்டத்தூர் மணக்காடு தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவருக்கு 19 வயது ஆகிறது. இந்த நிலையில் இவரது நண்பர்களோடு காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது நரசிம்மனின் நண்பர்களான பிரபு, கோபி, பழனிச்சாமி, சதீஷ்குமார், சந்துரு ஆகிய ஐந்து பேருடன் நரசிம்மனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த நரசிம்மன் செப்டம்பர் 1ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார், இதையடுத்து மீட்கப்பட்ட நரசிம்மன் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 3-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நரசிம்மனின் தாய், நரசிம்மனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தற்கொலைக்கு காரணமான நண்பர்கள் ஐந்து பேரையும் கைது செய்ய வலியுறுத்தினார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில் நரசிம்மனின் நண்பர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.