திருச்சியில் வஉசி சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை!

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று செப்டம்பர் 5 முதலே திருச்சி கோர்ட்டு அருகிலுள்ள வ உ சிதம்பரனாரின் வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், வ.உ.சி பேரவையைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் கழக நிர்வாகிகளுடன் வந்து வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் திமுகவைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மற்றும் அதிமுகவின் சார்பாக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொழிற்சங்க மாநில பொது செயலாளர் மூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நந்தலாலா ஆகியோர் மரியாதை செலுத்தினர். மேலும் நாம் தமிழர் கட்சி,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சி என்று பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து மரியாதை செலுத்திச் சென்றனர்.
செய்தி- அஸ்வின் செந்தில்
படம்- எபினேசர் ஜெகசெல்வன்
