திருச்சி முகாம் சிறையிலிருந்து கைதி தப்பி ஓட்டம்-பாதுகாப்பு அதிகரிப்பு!

0
1

திருச்சி மத்திய சிறையில் உள்ள முகாம் சிறையில் வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த கைதிகளும் அடங்குவர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இலியான் மார்கோவ் என்ற கைதி சிறையில் இருந்து தப்பித்தார். இதையடுத்து சிறையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தும், போலீசார் 3 தனிப்படை அமைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய கைதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இருக்கிறார்.

இந்த நிலையில் சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகர கமிஷனர் அருண் ஆய்வு செய்தார். அப்போது ஏராளமான முட்புதர்களும் சூழ்ந்து கிடந்ததாலும், மேலும் அந்த பகுதியில் வெளிச்சம் இல்லாததாலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்று கருதி உடனடியாக முகாம் சிறை பின்பகுதியில் உள்ள முட்புதர்கள் அனைத்தையும் அகற்றி, மின் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டார். இதன்பேரில் உடனடியாக முட்புதர்கள் அகற்றப்பட்டது, மேலும் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு சிறையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.