திருச்சி மாநகராட்சி விரிவாக்கம்-மாநகராட்சியுடன் இணைக்க குண்டூர் மக்கள் எதிர்ப்பு!

0
1

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதாக நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் கடந்த வாரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ள ஊராட்சிகள் பிரதிநிதிகளோடு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் குண்டூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று குண்டூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மேலும் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்து போராட்டம் நடத்தினர்.

2

அப்போது அவர் கூறியது குண்டூர் பகுதி விவசாயிகள் சார்ந்த பகுதி இன்றும் 100 நாள் வேலைத்திட்டத்தை கொண்டே மக்கள் தங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோகும் என்றும் கூறினர். இதை அடுத்து மாநகராட்சி யோடு இணைக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்