குழந்தைகள் நலக்குழு நிர்வாகிகள் நியமனம் ; விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு!

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,

குழந்தைநல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைகளின் உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித நல மருத்துவம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு ஆகிய ஏதேனும் ஒரு துறைகளில் பட்டம் பெற்று இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். மேலும் 35 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க செப்டம்பர் 15 மாலை 5.30 மணி வரை அவகாசம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் சுகாதாரம், கல்வி, குழந்தைகள் நலன் இதில் ஏதேனும் ஒரு பணிகளில் 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபட்டவராக வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நம்பர் 1, முதல் தளம், மெக்டொனால்ட் ரோடு கலையரங்கம் கண்டோன்மென்ட் திருச்சி 1 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். அல்லது http://tiruchirappalli.nic.in இணைய முகவரி அல்லது 0431 -24 130 55 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.