திருச்சி அருகே கணவன்-மனைவி தகராறில் பெண் கொலை-அழுகிய நிலையில் உடல் மீட்பு!

0
1

திருச்சி அருகே உள்ள உப்புலியபுரத்தைச் சேர்ந்த ஆர்.கோம்பை வடக்கு போயர் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் அவரது மனைவி புஷ்பவள்ளி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருச்சி வந்த கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது சத்தம் பலமாக வந்ததாகவும் பக்கத்து வீட்டார் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக உப்பிலியபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தியதில் புஷ்பவள்ளியின் உடல் அழுகிய நிலையில் போர்வை சுற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவரது கணவர் அங்கு இல்லாததும் தெரியவந்ததையடுத்து புஷ்பவள்ளி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.