திருச்சியில் கேட்பாரற்று கிடந்த 11 லட்சம் பணம் ! உரிமை கொண்டாடும் இரண்டு பேர் !

திருச்சி கே கே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்ட போது EVR சாலையில் அரிசி மில் அருகே கேட்பாரற்று கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனையிட்டபோது அதில் கட்டுகட்டாக 11 லட்சம் பணம் இருந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை கருவூலத்தில் செலுத்தினர்.
இந்த நிலையில் அந்த காரும் பதினோரு லட்சம் பணமும் தங்களுக்கு சொந்தம் என்று கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சார்ந்த பைசல் , அகமது ஆகியோர் கேட்டு உரிமை கொண்டாடி காவல் நிலையம் வந்தனர்.

ஆனால் அவர்களிடம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை அதை தொடர்ந்து ஆவணங்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்து கார் மற்றும் பணத்தை மீட்டுச் செல்ல போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
