காப்பாற்றிய “சீட் பெல்ட்”, விபத்தில் உயிர் தப்பிய திருச்சி கலெக்டர் !

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேற்று முன்தினம் சிபி ஆதித்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் திருமண நிகழ்ச்சிக்காக சேலம் சென்றிருந்தார். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் போது கனமழை பெய்து இருக்கிறது. அப்போது சாலையில் லாரி ஒன்று நின்றிருந்தது தெரியவில்லை.

இதில் கலெக்டர் சிவராசு வந்த வாகனம் லாரி மீது மோதியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு கூறியது, திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சியை நோக்கி வந்தபோது மழையின் காரணமாக எதிரே நின்ற லாரி தெரியவில்லை, இதில் வாகனம் மோதியதும் கைகளை வைத்து எல்லாம் முடிந்துவிட்டது என்று கண்ணை மூடிக்கொண்டேன். அப்போது சீட் பெல்ட் போட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். மேலும் வாகனத்தின் முன்னிருந்த பலன்களும் விரிந்து கொண்டது. பின்னால் அமர்ந்து இருந்த உதவியாளர் பெரியண்ணன் சாமி மற்றும் மினி லாரி டிரைவர் ஆகியோர் சிறிய காயம் அடைந்தனர். பிறகு காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றார். சீட் பெல்ட் அணிந்திருந்தால் பெரிய விபத்திலிருந்து உயிர் பிழைத்ததாக கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.