திருச்சி மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் விருது-ஆசிரியர்களின் விவரம்!

தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்த கல்வியாண்டில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் தேர்வான ஆசிரியர்கள் விவரம், மணச்சநல்லூர் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா,
துறையூர் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார்,
எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெயராணி,
வையம்பட்டி பாப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா மேரி,
வெல்லனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலசுப்ரமணியன்
மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முத்துச்செல்வன்
மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் அன்பு சேகரன்,
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிவராஜ்,
மணப்பாறை உசிலம்பட்டி தியாக சிலர் ஆலய மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார்,
திருநெடுங்குளம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் நித்யானந்தம்,
திருவரம்பூர் மேலகல்கண்டார்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பீபி அப்துல்,
கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணேசன்,
திருவரம்பூர் வெங்கூர் செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பகவதியப்பன் ஆகியோர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
