திருச்சி அருகே தாசில்தார் மீது தாக்குதல்-திமுக பொருளாளர் கைது!

0
1

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நகர நிலவரித் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் தனி தாசில்தாராக பாத்திமா சகாயராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திமுகவின் மணப்பாறை நகர பொருளாளர் கோபி என்பவர் நிலவரித் திட்ட அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் ஒரு இடத்திற்கான சர்வே எண்ணை கேட்க, அதற்கு தாசில்தார் ஆவணங்களை கூறுமாறு தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதையடுத்து தாசில்தார் பாத்திமா சகாயராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் கோபியும் சிகிச்சைகள் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நில அளவை ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் பாத்திமா சகாயராஜை தாக்கிய திமுகவின் நகர பொருளாளர் கோபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று நில அளவையர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தை பூட்டி அலுவலகத்திற்கு வந்து தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியிலுள்ள வருவாய்த்துறை ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

2

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோபியிடம் போலீசார் விசாரணை நடத்தி தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும்
மணப்பாறையில் தனி வட்டாட்சியரை தாக்கிய கோபி இரவு 12.15 மணி அளவில் கைது செய்யப்பட்டார். மணப்பாறை டாக்டர் கலையரசன் மருத்துவமனையில் மேஜிஸ்ட்ரேட் நேரடியாக வந்து விசாரணை செய்து 17 .9 .2021 வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்கள் . அதோடு கோபி போலீஸ் பாதுகாப்பில் அதே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.