திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உதவிய ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

0
1

திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் தங்க கடத்தல் நடைபெறுவதாக அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

2

இவ்வாறு துபாய், மலேசியா, சிங்கப்பூர், சார்ஜாவில் இருந்து வரும் மாதங்களில் அதிக அளவில் தங்க கடத்தல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தியவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அன்றைய தினம் பணியில் இருந்த சுங்கத் துறை ஆய்வாளர் அசோக் உதவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மத்திய சுங்கத்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்