திருச்சி தூய வளனார் கல்லூரி வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா

0
1

திருச்சி தூய வளனார் கல்லூரி வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா

திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி்த் தமிழாய்வுத்துறை வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. இயங்கலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழாய்வுத்துறைத் தலைவா் முனைவா் ஞா.பெஸ்கி வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி முதல்வா் அருள்முனைவா் ம.ஆரோக்கியசாமி சேவியா் தலைமையேற்றார். தம் தலைமையுரையில், தமிழ்த்துறையினா் தொடா்ந்து ஆற்றிவரும் இலக்கியப் பணிகளைப் பாராட்டி, கீழடி அகழ்வாய்வின் இன்றைய நிலையை எடுத்துக்கூறி தமிழா் பண்பாட்டின் தனித்த அடையாளங்களைச் சுட்டிக்காட்டினார்.

2

தமிழால் தலைநிமிர்வோம் என்னும் மையப்பொருளில் திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியா், நாடகவியலாளா் முனைவா் கி.பார்த்திபராஜா சிறப்புரையாற்றினார். தம் சிறப்புரையில் பண்டைகாலத் தமிழா்களின் பொதுவுடைமைச் சிந்தனை, நற்றமிழ் வளா்த்த தமிழ்ச்சான்றோர்களின் பணிகள், தமிழரின் அறக்கோட்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அரிய செய்திகளையும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்களையும் மேற்கோளிட்டு உரையாற்றி வருகிறார்.

நிகழ்வின் இறுதியில் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியா் திருமிகு அடைக்கலராஜ் நன்றியுரையாற்ற இருக்கிறார். முனைவா் பட்ட ஆய்வாளர் பா.எழில் செல்வன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறா். பேராசிரியா்கள், தமிழ் இலக்கிய மாணவா்கள் உள்பட 319 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்து வருகின்றனா்.

தொடக்கவிழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை வளனார் தமிழ்ப்பேரவை பொறுப்பாளர்கள் முனைவர் ஆ‌. மரிய தனபால் மற்றும் முனைவர் இலா.சார்லஸ் சிறப்பாக செய்திருக்கின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.