தவறு செய்யாதவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை-திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி!

0
1

அமமுக வின் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் இல்லத் திருமண விழா நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோடநாடு கொலை வழக்கில் தன்னை சிக்க வைப்பதற்கான முயற்சி நடைபெறுவதாக தமிழக அரசின் மீதும், காவல்துறை மீது குற்றம் சாட்டுவது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, எந்த தவறும் செய்யாதவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டார். மேலும் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பாடி குறிப்பிட்ட கருத்திற்கு அவர்தான் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஜெயலலிதாவின் பெயரில் செயல்படும் பல்கலைக்கழகம் அப்படியே தொடர அனுமதிக்க வேண்டும், அதுதான் அரசுக்கு பெருந்தன்மை. ஆனால் அதை திமுக அரசிடம் எதிர்பார்க்க முடியாது என்று கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.