ஒரே நேரத்தில் 5 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா-திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் தீராம்பாளையம் ஊராட்சியில் சாவித்திரி என்பவர் ஊராட்சி தலைவராக உள்ளார். மேலும் இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன.
ஆனால் ஊராட்சித் தலைவரும் தலைவரின் கணவரும் ஊராட்சி உறுப்பினர்களை மதிப்பது இல்லை என்றும், ஒருமையில் பேசுவதாகவும், கணக்கு வழக்கு ஏதும் காட்டுவதில்லை என்றும், தங்கள் வார்டுகளுக்கு எவ்வித வசதியும் செய்து தரவில்லை என்றும், உறுப்பினர்கள் கையெழுத்து இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றி கொள்வதாகவும் ஊராட்சி தலைவர் மீது குற்றம்சாட்டி வார்டு உறுப்பினர்களான ரங்கம்மாள், நித்தியா, சவுந்தர்யா, தங்கையன்,ரெங்கபாசன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதனால் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
