திருச்சியில் வாழை சம்பந்தமான நிறுவனத்திற்கு 10 லட்சம் வரை நிதி உதவி; வேளாண் துணை இயக்குனர் தகவல்!

0
1

திருச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்கள் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் நிதி பங்களிப்பு என்ற அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2

இவ்வாறு திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயத்தை மேம்படுத்தும் பொருட்டு உணவு பதப்படுத்தும் நிறுவனத்திற்கு தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 10 லட்சம் வரை நிதி உதவி பெற்றுக்கொள்ளலாம் என்றும்.
அதோடு உழவர் உற்பத்தி நிறுவனங்கள்,சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் நிதி உதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

4

இப்படி திருச்சி மாவட்டத்தில் வாழை விளைபொருளை பதப்படுத்தும் தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிதாக ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இத்திட்டத்திற்கான அலுவலர் சித்திக்கை 97 90 85 64 00 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று வேளாண் வணிக துணை இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்