திருச்சியில் தனியார் நிதி நிறுவனத்தால் விவசாயி தற்கொலை-விவசாய சங்கத்தினர் சாலை மறியல்!

0
1

திருச்சி உறையூரில் இயங்கக்கூடிய இகோடாஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற திருச்சி குழுமணி பேரூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற விவசாயி தவணைத் தொகை செலுத்த வில்லை என்று கூறி தரக்குறைவாக பேசியதோடு, பணம் திருப்பித் தரும்வரை இடத்தைவிட்டு செல்லமாட்டோம் என்று கூறி நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து மிரட்டு, அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாரிமுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஜியபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ள திருச்சி அரசு மருத்துவமனையில் விவசாய சங்க தலைவர்கள் ஆயிலை சிவசூரியன், அய்யாக்கண்ணு மற்றும் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் வாயில் முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தனியார் நிதி நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதையடுத்து போலீசார் அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.