திருச்சியில் மாற்று பாலினத்தை சேர்ந்தவர்கள் இடையே மோதல்-போலீஸ் குவிப்பு!

0
1

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நேற்று இரவு அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்றுப் பாலினத்தவர்கள் கூட்டமாக நின்று பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதிக்கு வந்த மத்திய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த மாற்று பாலினத்தவர்களுக்கும், அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்று பாலினத்தவர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

2

வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கண்டோன்மென்ட் ஏசி மற்றும் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மேலும் கூடுதல் போலீசாரும் வரவழைக்கப்பட்டு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். பிறகு இரு தரப்பினரையும் அங்கு இருந்து அனுப்பி வைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்