திருச்சி விமான நிலைய விரிவாக்கம்-அரசு கொடுக்கும் இழப்பீடு பத்தாது மக்கள் போராட்டம்!

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட கூட்டமைப்பு சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இப்போது விமான நிலைய விரிவாக்கத்திற்காக கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட நத்தம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த யாகப்பா நகர், சூசை நக,ர் சவேரியார் நகர், அமுல் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களின் நிலங்கள் மற்றும் குடிமனைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை அகற்றுவதற்கான பணியை விமான நிலைய நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் அதற்கான உரிய இழப்பீடு தொகையும் போதுமானதாக இல்லை என்று கூறியும் அதோடு மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள நிலங்களுக்கு மாநகராட்சியில் மதிப்பின்படி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசுவை சந்தித்து மனுக்கு வழங்கினார்.
