ரவுடிகளுக்கு திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை!

0

திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் கூறியிருப்பது, திருச்சி மாநகரில் உள்ள தொடர் குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள், ரவுடிகள் கண்டறியப்பட்டு இருக்கின்றன.ர் அவர்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ரோந்து காவலர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உரிய சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த ஆண்டில் 456 நபர்களுக்கு பொது அமைதி பேணுவதற்கான ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு மொத்தமாக 495 நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஜாமினை மீறி செயல்பட்ட 35 நபர்கள் மாநகர நிர்வாகத்துறை நடுவரான துணை கமிஷனரால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருச்சி மாநகரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.