நாட்டின் வளர்ச்சியில் அங்கம் வகிக்கும் ஸ்டேட் பாங்க்’ஸ் ஸ்டாப் யூனியன்!

0
1

நாட்டின் வளர்ச்சியில் அங்கம் வகிக்கும் ஸ்டேட் பாங்க்’ஸ் ஸ்டாப் யூனியன்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டு, இந்தியாவின் அனைத்து அங்கத்திலும் தன்னுடைய கிளை பரப்பி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள், சங்கமாக திரண்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

அனைத்துத் தரப்பு மக்களுக்குமான வங்கியாகவும், நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கும் இன்றளவும் பங்காற்றி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த வளர்ச்சி அதன் ஊழியர்களாளேயே சாத்தியமாகியிருக்கிறது.

2

இத்தகைய சிறப்புமிக்க இவ்வங்கி யின் ஊழியர்களுக்கு கேடயமாகவும் அரணாகவும் அமைந்து பாதுகாத்துக் கொண்டிருப்பது ‘ஸ்டேட் பேங்க்’ஸ் ஸ்டாப் யூனியன்’. இத்தொழிற்சங்கம் வங்கி நலன் சார்ந்தும், வாடிக்கையாளர் நலன் சார்ந்தும், நாட்டின் நலன் சார்ந்தும், ஊழியர்களின் நலன் சார்ந்தும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இப்படி இந்திய வங்கிகளின் வரலாற்றில் பாரத ஸ்டேட் வங்கி எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு வங்கியின் ஊழியர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கான உரிமையை பெற்றுத் தருவதாக ஊழியர்கள் சங்கமும் அமைந்திருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கப்பட்டு, சுதந்திர இந்தியாவிலும் தனது பங்களிப்பை ஆற்றி வருகிறது ஸ்டேட் பேங்க்’ஸ் ஸ்டாப் யூனியன். இப்படியான வரலாற்றுப் பெருமை கொள்ளும் ‘ஸ்டேட் பேங்க்’ஸ் ஸ்டாப் யூனியன்’ (சென்னை வட்டம்) 1946 ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கப்பட்டு கடந்த 4ம் தேதியுடன் 75 வது ஆண்டு நிறைவடைகிறது.

75 ஆண்டுகால சிறப்புமிக்க வரலாற்றை நினைவு கூறும் வகையில், வங்கியின் வளர்ச்சிக்கும், ஊழியர்களின் நலன் சார்ந்த பணிகளையும் சிறப்பாக நடத்தி பாதுகாத்த முன்னாள் ஊழியர்கள் பாராட்டு விழா கடந்த 7ம் தேதி (7.8.2021) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்கத்தை முன்னின்று செயல்படுத்திய முன் னாள் நிர்வாகிகள் பங்கேற்று கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் நிர்வாகிகள் என்.சுப்ரமணியன், ஆர்.அசோகன், எம்.சந்திரா கில்பர்ட், எஸ்.ஏ.இ.தவராஜ், கே.வாசுதேவன், ஆர்.டேவிட் ஜெய் சங்கர் ராய், கே.தமிழ்வேல், ஆர்.ஜெகநாதன், கே.பி.சாரதி, கே.அரவிந்தன், டி.அற்பு தராஜ், ஏ.தாமஸ், சி.செல்லதுரை, எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருச்சி சப்-அலுவலக துணைப் பொதுச் செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, உதவி பொதுச் செயலாளர் ஜெ.ஆண்ட்ரூஸ், மத்திய குழு உறுப்பி னர் கொ.தங்கமணி ஆகியோர் மேற்கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.