1000 பேருக்கு வேலைவாய்ப்பு..!

0

1000 பேருக்கு வேலைவாய்ப்பு..!

எகுவிட்டி சொலியூசன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம், இணையத் தொடர்பு வசதி மூலம் எழுத்துப் பணி மற்றும் மொழி மாற்ற சேவைப் பணிகள்(Virtual Scribing), மருத்துவ ஆவணங்களைப் படியெடுத்தல், அவற்றைப் புதிதாக உருவாக்குதல் (Medical Transcription), மருத்துவக் குறியீடு எழுதும் பணி (Medical Coding Services) போன்ற பல்வேறு பணிகளை எகுவிட்டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இத்துறையில் 45 ஆண்டு அனுபவம் உள்ள இந்நிறுவனத்திற்கு அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அலுவலகங்களை அமைத்துச் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

இந்நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள டிஎல்எஃப் சைபர் சிட்டி வளாகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள திறன் மிகு பணியாளர்களை தங்கள் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் முதல் கட்டமாக 200 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.