திருச்சியில் அச்சுறுத்தும் நாய்கள் மற்றும் மாடுகள்-நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை!
திருச்சி மாநகர் பகுதி முழுவதும் நாய்கள் நடமாட்டம் அதிகரித்து நாய்கள் தொல்லை பெருகி வருவதாக மக்கள் குற்றம் சாட்ட தொடங்கியிருக்கின்றனர். இவ்வாறு திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள கல்லுகுழி பகுதிகளுக்குள் நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் குழந்தைகள், பெண்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அஞ்சுவதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது மட்டுமல்லாது அந்த பகுதியில் ஜல்லிக்கட்டு மாடுகள் தொந்தரவும் அதிகமாக இருப்பதாகவும் மாடுகள் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் அச்சுறுத்துவது போல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு நாய்கள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றிக்கொண்டு கல்லுகுடி பகுதியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்று கூறுகின்றனர். இதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து அச்சுறுத்தும் நாய்களையும் மாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.