BC/MBC/ மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவிகளின் அரசின் கல்வி உதவித்தொகை பெறுதல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

0
1

BC/MBC/ மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவிகளின் அரசின் கல்வி உதவித்தொகை பெறுதல் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த கல்வி உதவித்தொகைக்கு 2021-22ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள்,

4

இயக்குநர்,

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,

எழிலகம் இணைப்பு கட்டடம்,

2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5

தொலைபேசி எண்.044-28551462

 

மேற்குறிப்பிட்ட முகவரியிலோ அல்லது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது  இந்த tngovtiitscholarship@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் அனுப்ப கோரி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் 2021-22ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தினை  பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பித்தினை பரிந்துரை செய்து மேற்கண்ட முகவரிக்கு 30.11.2021-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்  என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துக்கொண்டுள்ளார்.

 

2.

2

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்ட படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாணவ/மாணவியரின் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் 30.09.2021-க்குள்ளும், புதியது இனங்களுக்கு 05.11.2021-க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

கல்வி உதவித்தொகை இணையதளம் (Schoalarship portal) புதுப்பித்தலுக்கு 15.10.2021 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான  (Renewal) விண்ணப்பங்கள் 14.11.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு  (Fresh) இணையதளம் 16.11.2021 முதல் செயல்பட துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்களை 31.12.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும்.

அரசு இணையதளம்  www.tn.gov.in/bcmbcdebt–யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

மேற்கண்ட விவரப்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் இன மாணவ/மாணவியர் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயனடையலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துக்கொண்டுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்