திருச்சியின் புராதன சின்னமான இராணி மங்கம்மாள் கட்டிடத்தை புனரமைக்க 9.4 கோடி-பொதுப்பணித்துறை முடிவு!

தமிழகம் முழுவதுமுள்ள நூற்றாண்டுகள் பழமை கொண்ட புராதன சின்னங்களை புனரமைக்க பொதுப்பணித் துறையின் சார்பில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு புராதன கட்டிடங்கள் புனரமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சி மாவட்டத்தின் பழைய கலெக்டர் அலுவலகமான ராணி மங்கம்மாள் கட்டிடத்தை புனரமைக்கும் பணிக்கு 9.4 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இதுமட்டுமல்லாது திருச்சி உள்ளடக்கிய மத்திய மண்டலத்திலுள்ள பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
