அனைத்து நாட்களும் கோயில் திறக்க வேண்டும்-இந்து முன்னணி கோரிக்கை!

0

திருச்சி ஆகஸ்ட் 29 நேற்று திருச்சி கோட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் புத்தூர் நால் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார்.

இதில் கொரோனா நோய் தொற்று காரணமாக கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் மூடப் பட்டு இருக்கிறது. இதை மாற்றி அனைத்து நாட்களும் கோயில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதில் மாநில செயலாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார்.

Leave A Reply

Your email address will not be published.